ETV Bharat / city

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 50 விமானங்களை இயக்க ஏற்பாடு - Chennai airport run ways

சென்னை விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 50 விமானங்களை இரண்டு ஓடு பாதைகளிலும் ஒரே நேரத்தில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நேரத்தில் 50 விமானங்கள் இயக்கும் திட்டம்...

author img

By

Published : Jun 28, 2022, 6:17 PM IST

சென்னை: சென்னை விமானநிலையத்தில் தற்போது ஒரு மணி நேரத்தில் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதை 50 விமானங்களாக அதிகரிக்க, சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தரையிறங்கும்,புறப்படும் விமானங்கள் வேகமாக இயக்கப்படுவதற்காக, டாக்சி வே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க, புறப்பட '2 ரன் வே'க்கள் உள்ளன. முதல் 'ரன் வே' 3.66 கி.மீ., தொலைவும் இரண்டாவது ரன் வே 2.89 கிமீ தொலைவும் கொண்டுள்ளது. இதில் முதல் ரன் வேயில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்படுகின்றன. இரண்டாவது ரன் வேயில் ATR எனப்படும் 76 பயணிகள் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது 2 ரன் வேக்களையும் ஒரே நேரத்தில் இயக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது, ‘சென்னை விமான நிலையத்தின் முதல் ரன் வே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது ரன் வேயில் கொளப்பாக்கம் பகுதியில் உயா்ந்த அடுக்குமாடிக் கட்டடங்கள், செல்போன் டவா்கள் போன்ற தடைகள் அதிகம் இருப்பதால் அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதனால் இரண்டு ரன்வேக்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

முதல் ரன்வேயில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்படுகின்றன
முதல் ரன் வேயில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்படுகின்றன

இந்திய விமானநிலைய ஆணையத்தின் முடிவு:தற்போது அவ்வப்போது 'முதல் ரன்'-வேயில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போதும் செவ்வாய், சனிக்கிழமைகளில் பிற்பகலில் வாராந்திர பராமரிப்பு நடக்கும்போது மட்டும், இரண்டாவது ரன்வே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து முதல் ரன்வே அளவுக்கு இரண்டாவது ரன்வேயின் நீளத்தையும் அதிகரிக்க இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்தது.

அதற்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மாநில அரசிடம் தேவையான நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும்படி கேட்டது. ஆனால், அப்போதைய அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை. மேலும் சென்னை அருகே ரூ.40 ஆயிரம் கோடியில் மிகப்பெரிய கிரீன் ஃபீல்டு விமானநிலையம் விரைவில் அமைக்கப்படவிருப்பதால், இரண்டாவது ரன்வேயினை நீட்டிக்கும் திட்டத்தை இந்திய விமானநிலைய ஆணையம் கைவிட்டுவிட்டது.

இரண்டாவது ரன்வேயில் ATR எனப்படும் 76 பயணிகள் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் உள்நாடு மற்றும் சா்வதேச விமானங்களின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ரன் வேக்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த சென்னை விமானநிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

தரையிறங்க தனிப்பாதை: இது குறித்து அந்த அலுவலர் தெரிவிக்கையில், 'முதல் பிரதான ரன் வேயை புறப்பாட்டிற்காகவும், இரண்டாவது ரன் வேயை,விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை விமானநிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஒரே நேரத்தில் இரண்டு ரன் வேக்களிலும் விமானங்களை இயக்குவது குறித்த பயிற்சி முடிந்ததும் அவற்றை முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்பு நிரந்தரமாக அவ்வாறு இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்தில் தற்போது பிரதான முதல் ரன் வேயில் ஒரு மணி நேரத்தில் 30-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் ஒரே நேரத்தில் 50 விமானங்கள் இயக்கும் திட்டம்...

2 ரன்வே ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது 50-க்கும் அதிகமான விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இயக்க முடியும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் 2 ரன் வேக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இவ்வாறு சென்னை விமானநிலைய அலுவலர் தெரிவித்தார்.

டாக்ஸி வே இணைப்புப்பாதை: இதற்கிடையே தரையிறங்கும் விமானங்கள் விரைந்து வந்து விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் ஒரு ஓடு பாதையிலிருந்து,மற்றொரு ஓடு பாதைக்கு விரைவாக செல்ல டாக்ஸி வே எனும் இணைப்புப் பாதை பயன்படுத்தப்படுகிறது.

இந்த டாக்ஸிவே பி என்ற பிராவோ முதல் ஓடுபாதைக்கு நேராக செல்லாமல் வளைந்து செல்லும் வகையில் இருந்தது. இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள் டாக்ஸிவேயில் விரைவாக செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்த டாக்ஸிவே பி-யை நேர்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதனால் விமானங்கள் தரையிறங்குவது,புறப்படுவது மேலும் வேகமாக இயக்கப்படும் என விமான நிலைய உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாதவிடாய் முதல் கருத்தரித்தல் வரை - பெண்களுக்கு உதவும் வாட்ஸ் அப் செயலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.