மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புலம்பெயர் தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்க இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் இ-பாஸ் போர்ட்டல் (http://tnepass.tnega.org) செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் பயணிக்க, இதற்கு முன் அனுமதிக்கப்பட்ட காரணங்களான திருமணம், இறுதிச் சடங்கு மற்றும் மருத்துவ அவசரநிலை தவிர, கூடுதலாக வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதும், இ-பாஸ் வழங்குவதில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, சொந்த ஊர் திரும்ப விருப்பமுள்ள புலம்பெயர் மக்கள் இந்த இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம். இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் நபர்களின் நடமாட்டத்தையும், இ-பாஸ், கரோனா தொடர்பான சிக்கல்களையும் கண்காணிப்பதற்காக, கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. எனவே, இப்பணிகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் அலுவலர் பிங்கி ஜோவல், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் பொது மேலாளர் ஆனந்த குமார், தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷனின் பொது மேலாளர் சாந்தகுமார் ஆகியோரை சிறப்பு அதிகாரிகளாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இதையும் படிங்க: மே 17க்கு பின் மத்திய அரசின் திட்டம் என்ன? - சோனியா கேள்வி