ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய கரோனா வைரஸ் பரவலையொட்டி, மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்று, விமானங்களில் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் பலா் தங்கள் விமான பயணங்களை ரத்து செய்கின்றனா்.
இந்தநிலையில் சென்னையிலிருந்து துபாய் செல்லும் சிறப்பு பயணிகள் விமானம், இண்டிகோ(6E 65) இன்று (டிச.24) அதிகாலை 00.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானமும், அதைப்போல் துபாயிலிருந்து இன்று காலை 10.50 மணிக்கு சென்னை வரவேண்டிய சிறப்பு பயணிகள் விமானம் இண்டிகோ(6E 66) ஆகியவை திடீரென ரத்து செய்யப்பட்டன.இச்சிறப்பு இண்டிகோ விமானத்தில் துபாய்க்குச் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, நிா்வாகக் காரணங்களுக்காக விமானம் ரத்து, வேறு தேதிகளில் பயணித்து கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
ஆனாலும் சில பயணிகள் சென்னை விமான நிலையம் வந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் கவுண்டரில் திடீரென ரத்துக்கு என்ன காரணம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவா்களை விமான நிலைய அலுவலர்கள் அமைதிப்படுத்தி திருப்பி அனுப்பிவைத்தனா்.
இதையும் படிங்க: காசியின் மீது குற்றப்பத்திரிகை... நண்பரின் பாஸ்போர்ட் முடக்கம்... சிபிசிஐடி அதிரடி!