ETV Bharat / city

பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, சிறப்பு முகாம்! - தேர்தல் 2021

சென்னையில் 16 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

list
list
author img

By

Published : Nov 21, 2020, 1:50 PM IST

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களுக்கு சென்று பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், தொகுதி இடமாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக இன்றும் நாளையும் நடக்கும் இந்த சிறப்பு முகாம், இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இங்கு மொத்தமாக 5 படிவங்கள் உள்ளன. அதில் படிவம் 6 பெயர் சேர்த்தலுக்கும், படிவம் 6A கடவுசீட்டு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருத்தம் மேற்கொள்வதற்கும், படிவம் 7 பெயரை நீக்குவதற்கும் பயன்படும். மேலும், பெயரில் திருத்தம் செய்ய படிவம் 8ம், தொகுதி இடமாற்றம் செய்ய படிவம் 8Aம் வைக்கப்பட்டுள்ளன.

பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, சிறப்பு முகாம்!

மையத்தில் நான்கு ஊழியர்கள் என முகக்கவசத்துடன் பணிபுரியும் இம்முகாமில், காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்தும், புது வாக்காளர்கள் தங்களுக்கான படிவத்தை பூர்த்தி செய்தும் செல்கின்றனர். இது மட்டுமின்றி மக்கள் தங்களுடைய பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள ’www.elections.tn.gov.in' என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'திமுகவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஏற்கும்' ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.