சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல, சொந்த ஊர் சென்றவர்கள் பண்டிகை முடிந்து திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 17,719 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
குறிப்பாக கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படஉள்ளன.
மேலும் கடந்த 4 நாள்களில் மட்டும் போக்குவரத்து துறைக்கு ரூ.86 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோ வரும் இரண்டு நாள்களிலும் வருவாய் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகைக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!