ETV Bharat / city

தனியார்மயமாக்கலை திமுக அரசு ஏற்காது - தங்கம் தென்னரசு

பொது சொத்துகளை தனியார்மயமாக்குவது குறித்த சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை கொண்டு வந்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

தனியார்மயமாக்கல், தங்கம் தென்னரசு, thangam thennarasu
தனியார்மயமாக்கல்
author img

By

Published : Sep 2, 2021, 1:06 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சிறு குறு தொழில் ஆகியவற்றின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (செப். 2) நடைபெற்று வருகிறது.

அப்போது, பொது சொத்துகளை தனியார்மயமாக்குவது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை கொண்டு வந்தார்.

பட்டியலில் ஊட்டி ரயில்

இதற்கு, பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,"பிபிபி (Public–Private Partnership) அதாவது பொது சொத்துகள் ஒன்றிய அரசு தனியார்மயமாக்குவது குறித்த கொள்கை வெளியிடப்பட்டது.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள்போல் தமிழ்நாட்டிலும் சாலைகள், ஊட்டி ரயில் பகுதிகள் என பல்வேறு பொது சொத்துக்களை தனியார் மயமாக்குவதற்கு ஒன்றிய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில்தான் போக்குவரத்து நாட்டுடமை ஆக்கப்பட்டது.

மாநில அரசுடன் ஆலோசிக்கவும்

பொது சொத்துகளை தனியார் மயமாக்கும்போது ஒன்றிய அரசு, மாநில அரசுகளை ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவது கண்டிக்கத்தக்கது.

இதுதொடர்பாக ஏற்கனவே திமுக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. அந்த பொது சொத்துக்களில் மாநில அரசு நிலங்களும் உள்ளது.

அப்படியிருக்க, ஒன்றிய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். பொது சொத்துகளை தனியார் மயமாக்குவதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. அதை கடுமையாக எதிர்க்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.