ETV Bharat / city

எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கையை நிராகரிப்பு - சபாநாயகர் அப்பாவு - Opposition Leader

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கையை நிராகரிப்பு  - சபாநாயகர் அப்பாவு

author img

By

Published : Oct 18, 2022, 4:11 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2ஆவது நாளாக இன்று தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்திற்கு முன்னதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு வலியுறுத்தி எழுந்து நின்று கோசமிட்டனர்.

அப்போது பேசிய சபாநாயகர், கேள்வி நேரத்திற்கு பின்னர் தான் எதை வேண்டுமானாலும் எடுக்க முடியும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கையை நிராகரித்தார். சட்டப்பேரவை மாண்பை சீர் குலைக்கும் விதமாக நடந்து கொள்வதால், அதிமுகவினரை வளாகத்தை விட்டு வெளியில் அனுப்ப அவைக் காவலருக்கு உத்தரவிட்டார்.

சட்டப்பேரவையில் இவரை இங்கு அமர வைக்க கூடாது என்பதை தெரிவிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் மாற்றி கேட்டால் அது குறித்து ஆலோசிக்கப்படும்தெரிவித்தார். அதோடு பேரவை விதி 2 பிரிவு O வின் படி எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி மற்ற பொறுப்புகள் சட்டமன்ற உறுப்பினர்களின் திருப்த்திக்கு உட்பட்டது. இதனால் யார் எங்கே உட்கார வைக்க வேண்டும் என்பது குறித்த அனைத்து முடிவுகளுமே சபாநாயகரின் அதிகாரத்தின் உட்பட்டது சபாநாயகரை யாரும் இதில் கட்டாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது - - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.