ETV Bharat / city

நவீன இயந்திரம் தயாரிக்கும் ஆய்வுமையம் சென்னையில் தொடக்கம்!

author img

By

Published : Aug 31, 2019, 5:10 AM IST

சென்னை: இந்திய தொழில்நுட்ப கழகம்(ஐஐடியில்) ஆட்டோமொபைல் துறையில் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வு மையத்தை, தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறையின் செயலாளர் ஷியாக் தொடக்கிவைத்தார்.

research center

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில்(ஐஐடி) ஆட்டோமொபைல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ரூ. 66 கோடி செலவில் நவீன இயந்திரங்கள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கார்கள், இருசக்கர வாகனங்கள், விமானம், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் வகையில் நாட்டில் முதல்முறையாக ஆராய்ச்சியுடன் கூடிய தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை செயலாளர் சியாக் பேசுகையில், இந்த ஆய்வுக் கூடம் மூலம் வெளிநாடுகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள் இறக்குமதி செய்வதற்கான தேவையும், செலவினங்கள் குறையும் என்றார்.

ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் இயந்திரம்  ஐஐடியில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆய்வு மையம்  Spare Parts Research Center starts at IIT
பொது நிறுவனங்கள் துறையின் செயலாளர் ஷியாக்

தொடர்ந்து ஐஐடியின் முதல்வர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசுகையில், ஐஐடி ஏற்கனவே தானியங்கி உதிரிபாகங்களை தயாரிக்க ஏராளமான தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள், ராணுவ தளவாடங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் வகையில் இந்த ஆராய்ச்சிக்கூடம் இயந்திரங்கள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.

நவீன இயந்திரம் தயாரிக்கும் ஆய்வுமையம்

Intro:விமானம், ராணுவ தளவாடங்கள் தயாரிக்க
சென்னை ஐஐடியில் நவீன இயந்திரம் தயாரிப்பு

Body:சென்னை,
சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் ஆட்டோமொபைல் துறையில் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வு மையத்தை தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறையின் செயலாளர் ஷியாக் துவக்கிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு இயந்திரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

விமானங்கள் ராணுவ தளவாடங்கள் தேவையான பொருட்களை தயாரிக்கும் வகையில் இந்த ஆராய்ச்சிக்கூடத்தில் இயந்திரங்கள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை ஐஐடியில் ஆட்டோமொபைல் துறையில் நவீன இயந்திரங்கள் ஆராய்ச்சிக்காக 66 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் கார்கள் இருசக்கர வாகனங்கள் விமானம் ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை தயாரிக்க கூடியவகையில் நாட்டில் முதல்முறையாக ஆராய்ச்சியுடன் கூடிய தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சி குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் செயலாளர் சியாக் , சென்னை ஐஐடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழிற்கூடம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பெரிய தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான தேவை குறையும். மேலும் இதற்கு ஆகும் செலவினங்கள் பெருமளவில் குறைக்கப்படும் என கூறினார்.
இதுகுறித்து சென்னை ஐஐடியின் முதல்வர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறும்பொழுது, ஏராளமான தொழில் நிறுவனங்களுடன் மற்றும் தானியங்கி உதிரிபாகங்களை தயாரிக்க சென்னை ஐஐடி ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விமானங்கள் ராணுவ தளவாடங்கள் தேவையான பல பொருட்களை சென்னை ஐஐடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மூலம் தயாரிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.