ETV Bharat / state

"ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்" - அயலக தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு! - TN CM MK Stalin in USA today Speech - TN CM MK STALIN IN USA TODAY SPEECH

TN CM MK Stalin: ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வாருங்கள், வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள் என்றும், நம்முடைய வரலாற்றின் அடையாளமாக திகழும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள் எனவும் அயலக தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

சிகாகோ நிகழ்ச்சியில் பேசும் முதல்வர் ஸ்டாலின்
சிகாகோ நிகழ்ச்சியில் பேசும் முதல்வர் ஸ்டாலின் (Credits - TNDIPR X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 5:46 PM IST

Updated : Sep 8, 2024, 10:39 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நேற்று (செப்.7), சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதில் அவர் பேசியதாவது, "நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்று, பின்னர் அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்டாக வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள். சிகாகோவிற்கு வந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, தமிழ்நாடு எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று, இங்கிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் உங்கள் உறவுகளிடம் நிச்சயமாக பேசிக் கேட்டிருப்பீர்கள். செய்திகளில் படித்திருப்பீர்கள். எப்படி இருக்கிறது உங்களிடம் கேட்கிறேன்? (மக்கள் மிக சிறப்பு என்று கூறினர்) நன்றி.

தொழில் வளர்ச்சியை பொருத்தவரைக்கும், நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்தாலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு எப்படியெல்லாம் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்று சொல்லி, தொழில் தொடங்க வாருங்கள் என்று நான் அழைப்பு விடுப்பேன். அதனால்தான், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெருமையை அடைந்திருக்கிறோம்.

நாமெல்லாம் தனித்தனி தாயுடைய வயிற்றில் பிறந்திருந்தாலும், நாம் எல்லோருக்கும் இந்த உறவை, பாசத்தை ஊட்டிய ஒரு தாய் இருக்கிறார். அவர்தான் தமிழ்த்தாய்.

'உளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே! ஓடை நறுமலரே!

ஒளியுமிழ்ப் புதுநிலவே! அன்பே! அழகே! அமுதே! உயிரே! இன்பமே!

இனியத் தென்றலே! பனியே! கனியே! பழரசச் சுவையே! மரகத மணியே!

மாணிக்கச் சுடரே! மன்பதை விளக்கே! என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. நம்முடைய திமுக ஆட்சி தொடர்ந்து தமிழ்நாடு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கலைஞர் கணினிக் கல்விக்கு தந்த முக்கியத்துவத்தால் தான், ஐ.டி. துறையில் தமிழ்நாடு முன்னேறியது.

கலைஞர் உருவாக்கிய டைடல் பூங்கா மாதிரி அப்போது வேறு எந்த மாநிலத்திலும் பெரிதாக இல்லை. கலைஞர் அமைத்த அடித்தளத்தில், உலகத்தை தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்தோம். தமிழ்நாட்டை உலகம் உள்வாங்கியது. அதற்கு சாட்சியங்களாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பரணாக நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக ‘அயலகத் தமிழர் நல வாரியம்' உருவாக்கி இருக்கிறோம். அந்த வாரியத்தின் மூலமாக, 'தமிழால் இணைவோம்', 'உலகெங்கும் தமிழ்', 'தமிழ் வெல்லும்' ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் ‘எனது கிராமம்' என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அயலகத் தமிழர்க்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படுகிறது.

அயல்நாடுகளில் பணிக்குச் சென்று, அங்கு இறக்க நேரிடுபவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற 1,524 மாணவர்களை போர் காலத்தில் மீட்டு வந்தோம். கம்போடியா, தாய்லாந்து, மியான்மரில் இருந்து 83 தமிழர்களை மீட்டு வந்தோம்.

இஸ்ரேல் நாட்டுக்கு கல்வி கற்கச் சென்று படிப்பை தொடர முடியாத 126 பேரை மீட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,398 பேரை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டு வந்தோம். மொத்தத்தில், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், 'நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது' என்ற உணர்வை நம்பிக்கையை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது.

இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் 'வேர்களைத் தேடி' என்று, அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம். அதனால்தான், நான் எப்போதும் சொல்வேன். 'இது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு'. இங்கு கூடியிருக்கும், உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை.

உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள்.

வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள். சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள்.

தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் உங்கள் குழந்தைகளிடம், 'நம்முடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் இங்கு முதலமைச்சராக இருக்கிறார். அவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று சொல்லுங்கள். நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும்" என்று பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : செப்.23ல் தமிழக வெற்றிக் கழக மாநாடு! காவல் துறை அனுமதி! - TVK Manadu police permission

Last Updated : Sep 8, 2024, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.