ETV Bharat / city

மத்திய அரசிடம் ரூ. 9200 கோடி பெறப்படும் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2020-2021 ஆம் நிதியாண்டிற்கு மத்திய அரசிடமிருந்து ரூ.9200 கோடி நிதி பெறப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெவித்துள்ளார்.

அமைச்சர் எஸ் பி வேலுமணி
அமைச்சர் எஸ் பி வேலுமணி
author img

By

Published : Jan 22, 2021, 10:59 PM IST

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 9ஆவது மாநில வேலை உறுதி மன்ற குழுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சரின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் இதுவரை ரூ. 7,662 கோடி மத்திய மாநில அரசுகளால் நிதி விடுவிக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ. 1750 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை நிதிபெறப்படும். வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக ரூ. 9,200 கோடி அளவிற்கு 2020-2021ஆம் நிதியாண்டிற்கு மத்திய அரசிடமிருந்து நிதி பெறப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திற்காக 28 தேசிய, மாநில மாவட்ட ஊராட்சி ஒன்றிய விருதுகளை பெற்று தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையிலுள்ளது. கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கூடுதலாக 5.07 லட்சம் புதிய குடும்பங்களுக்கு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கூடுதலாக 7.08 லட்சம் புதிய பயனாளிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். முந்தைய வருடங்களைவிட கூடுதலாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 7.86 லட்சம் புதிய பெண் பயனாளிகளுக்கும், 7351 புதிய மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.