ETV Bharat / city

சென்னை மாநகராட்சியில் 6.75 லட்சம் எண்ணிக்கையில் கரோனா பரிசோதனை - எஸ்.பி. வேலுமணி - minister sp velumani

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6.75 லட்சம் எண்ணிக்கையில் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.

minister sp velumani
minister sp velumani
author img

By

Published : Jul 30, 2020, 1:06 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் 6.75 லட்சம் எண்ணிக்கையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 117.00 லட்சம் முகக் கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது 107.10 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. 6.17 லட்சம் கையுறைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 3.84 லட்சம் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட்-19 தொற்றுடைய மற்ற நோய் இல்லாத 60 வயதுக்குட்பட்டோர் கோவிட்-19 சோதனை மையங்களில் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அரசுக்கு தகவல் வரவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!

நாள்தோறும் இவர்களின் இருப்பிடத்தை களப் பணியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனுடன், வீட்டிலேயே சிகிச்சைப் பெறுபவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதி தேவைப்படுவர்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த தொடர் கண்காணிப்பு வீட்டு தனிமையில் உள்ள 14 நாட்களுக்கு நடைபெறும். இதுவரை 1,958 பேர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 38 வீடற்றோருக்கான காப்பகங்கள். அரசு மருத்துவமனைகளில் உள்ள 13 சிறப்பு காப்பகங்கள் மற்றும் 41 நிவாரண மையங்களில் மொத்தம் 5,261 பேர்கள் தங்க வைக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்கள் ( Hand Sanitizer ) வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் மாநகராட்சியில் பெறப்படும் காய்கறிகள், அரிசி மற்றும் மளிகை பொருள்கள் காப்பகங்களில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு வழங்க ஏதுவாக அளிக்கப்பட்டு வருகின்றது என அமைச்சர் தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 10.42 லட்சம் கட்டடங்கள் உள்ளன. இவற்றில், 19.80 லட்சம் குடும்பங்கள் உள்ளன. வீடுவீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு செய்யும் 12,000 களப் பணியாளர்களுக்கும் நாளொன்றுக்கு 100 முதல் 150 வீடுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவையை உலுக்கிய பண மோசடி சம்பவம்: எம்எல்எம் நிறுவனர் கைது!

இக்களப் பணியாளர்களை கண்காணிக்க 15 மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்களப் பணியாளர்கள் தினம்தோறும் இடைவிடாது தொடர் ஆய்வு செய்து, தினமும் அதற்குண்டான பதிவுகளை உரிய முறையில் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் 10.88 லட்சம் வீடுகள் இப்பணியாளர்களால் பார்வையிடப்படுகிறது. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில், சென்னை மாநகரில் 1,51,142 நபர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டு, 1,45,889 நபர்கள் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என தெரிவித்தார்.

ஒவ்வொறு கோட்டத்திற்கும் குறைந்தது 2 காய்ச்சல் முகாம்கள் என இதுவரை 25,532 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் பயனடைந்த 14,50,000 நபர்களில் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்ட 77,358 நபர்களில் 72,135 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் பகுதிகளில், இதுவரை 58 பகுதிகள் கரோனா நோய் தடுப்பு மண்டலங்களாக (Cluster Containment Zone) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வீடுதோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன . இதற்கென மாநகராட்சி சார்பில் 5,000 மூன்று சக்கர வாகனங்களும், 2,000 இலகு ரக நான்கு சக்கர வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன என்ற தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.