பயணிகள் வரத்து குறைவு காரணமாக, பல மார்க்கங்களில் இயங்கும் பல்வேறு சிறப்பு ரயில்களை மே 31ஆம் தேதி வரை ரத்து செய்து தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் ரத்து அறிவிப்பு வரும் ஜுன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எம்ஜிஆர் சென்ட்ரல் - மங்களூர் சென்ட்ரல், கேஎஸ்ஆர் பெங்களூரு - எர்ணாகுளம், திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை, சென்னை எழும்பூர் - திருச்செந்தூர், சென்னை எழும்பூர் - மன்னார்குடி, காரைக்கால் - எர்ணாகுளம் ஆகிய ரயில்கள் இரு மார்க்கங்களிலும் வரும் ஜுன் 15ஆம் தேதி வரை இயக்கப்படாது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 'மேகதாது அணை: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது' - துரைமுருகன் திட்டவட்டம்