ETV Bharat / city

மார்ச் மாதத்துக்குள் அனைத்து ஆளில்லா ரயில்வே கேட்கள் நீக்கப்படும் - தென்னக ரயில்வே

author img

By

Published : Feb 5, 2021, 7:27 PM IST

நவீன ரயில் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்துக்காக 544 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தென்னக ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 149 ஆளில்லா ரயில்வே கிராசிங்கள் 2021 மார்ச்க்குள் முற்றிலுமாக நீக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

railway eliminates unmanned level crossing

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிலுள்ள ரயில் திட்டங்கள், ரயில் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கான ரயில் திட்டங்களுக்கு 2,972 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 238 விழுக்காடு அதிகமாகும். 2014 முதல் 2019 வரை சராசரியாக 1,979 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கான ரயில் திட்டங்கள்

குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகளுக்கு, இந்த நிதிநிலை அறிக்கையில் 178 கோடி ரூபாயும், இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு 1206 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை- மணியாச்சி- தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் 2022க்குள் இது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், சேலம்- ஓமலூர் இரட்டை ரயில் திட்டத்துக்கு 35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, இது ஆகஸ்ட் 2022 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம். தற்போது தமிழ்நாட்டில் 27 ரயில்வே திட்டங்கள் 30,128 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தத் திட்டம்

ரயில்வே துறையில் தொலைத்தொடர்பு வசதிகளை நவீனமயமாக்க அதிகளவு முக்கியத்துவம் நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 146 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் மேம்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு 332 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 60 ரயில்வே கிராசிங்கில் இன்டர்லாக்கிங் முறையை அமல்படுத்த 93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், நவீன ரயில் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்துக்காக 544 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் 149 ஆளில்லா ரயில்வே கிராசிங் உள்ள நிலையில், மார்ச் 2021க்குள் இவை முற்றிலுமாக நீக்கப்படும். அதற்குப் பதிலாக ரயில்வே மேம்பாலங்கள் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும்.

கூடுதல் தகவல்: பட்ஜெட் 2021: ரயில்வே துறைக்கு எவ்வுளவு நிதி?

சென்னை கோட்டத்தில் ஒருங்கிணைந்த ரயில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மலை ரயிலைத் தவிர தென்னக ரயில்வேவில் உள்ள அனைத்து அகல ரயில் பாதைகளும் 2023 டிசம்பருக்குள் மின் மயமாக்கப்படும். புதிய பாம்பன் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அழகிய ரயில் பாதைகள் அமைந்துள்ள வழித்தடங்களில் தென்னக ரயில்வே விரைவில் கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்களை இயக்கும். இதற்கான வழித்தடங்கள் விரைவில் கண்டறியப்படும்.

வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதலில் சில வழக்குகள் இருப்பதால் இந்த நிதிநிலை அறிக்கையில் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் முக்கிய திட்டங்களுக்குச் சிறப்பு நிதி தொகுப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வேளச்சேரிலியிலுந்து ஆதம்பாக்கம் வரையிலான திட்டங்கள் இந்தாண்டுக்குள் நிறைவடையும்.

தனியார் ரயில்களின் வேகம்

தமிழ்நாட்டில் தனியார் ரயில்கள் இயக்கப்பட்டாலும் அவை இங்குள்ள ரயில்கள் செல்லும் வேகத்திலேயே இயக்கப்படும். இதற்கிடையே தென்னக ரயில்வே சார்பில் சென்னை ரேணிகுண்டா மற்றும் சென்னை கூடூர் ஆகிய வழித்தடங்களில் ரயில்களை 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாகச் சென்னை மதுரை மற்றும் சென்னை மங்களூரு வழித்தடங்களில் ரயில்கள் 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும்" என்றார்.

ரயில்கள் வழக்கமான பெயரில் இயக்காமல் தொடர்ந்து சிறப்பு ரயில்களாகவே இயக்கப்படுவதால் பயணிகள் குழப்பம் அடைவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தற்போது கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்தாலும் முழுமையாக நீங்கவில்லை. இதுகுறித்து மத்திய ரயில்வே வாரியத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் நிலைமையை நாள்தோறும் கண்காணித்து வருகிறார்கள், இது குறித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும். இருப்பினும் தற்சமயம் மக்களுக்குக் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக ரயில் நிலையங்களில் ரயில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்றார்.

சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் வசதி ஏற்படுத்துவதற்காகத் தற்காலிக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கரோனா தொற்று சற்று கட்டுக்குள் வந்ததும் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் அனைத்து நேரங்களிலும் அனுமதிக்கப்படுவர் என்றும், மாத பயண அட்டை வழங்கப்படும் என்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.