கரோனா பரவலை அடுத்து மார்ச் மாத இறுதியிலிருந்து நடைமுறையில் இருக்கும் ஊரடங்கில், கடந்த சில நாட்களாக அடுத்தடுத்த தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வரும் 7 ஆம் தேதி முதல், மாநிலத்திற்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து, ரயில் சேவைகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை(ஆக.7) முதல் மாநிலத்தில் இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில்களின் பட்டியலை, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி,
- சென்னை - கோயம்புத்தூர், சூப்பர் ஃபாஸ்ட் இன்டர்சிட்டி (6.10)
- கோயம்பத்தூர் - மயிலாடுதுறை - கோயம்புத்தூர், ஜன்சதாப்தி (செவ்வாய் கிழமை இயக்கப்படாது) (7.10)
- சென்னை - கோயம்புத்தூர் - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் (14.30)
- சென்னை எழும்பூர் - திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (22.00)
- சென்னை எழும்பூர் - காரைக்குடி - சென்னை எழும்பூர் (15.45)
- சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் (13.40)
- சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் அதிவேக விரைவு ரயில் (21.40)
- சென்னை எழும்பூர் - தூத்துக்குடி - சென்னை எழும்பூர் (19.35)
ஆகிய ரயில்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படும் என தெர்விக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து ரயில்களுக்கும் செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் முன்பதிவு தொடங்கும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு ஆலோசனை!