ETV Bharat / city

சொத்துக்காக மகனே தந்தையை கொலை செய்த கொடூரம்! - சொத்துக்காக மகனே தந்தையை கொலை செய்த சம்பவம்

வளசரவாக்கத்தில் சொத்துத்தகராறில் தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்து காவேரிப்பாக்கம் அருகே புதைத்த மகனை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

சொத்துக்காக மகனே தந்தையை கொலை செய்த சம்பவம்

author img

By

Published : May 20, 2022, 4:39 PM IST

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலை தாண்டவமூர்த்தி நகரைச் சேர்ந்தவர், குமரேசன்(78). இவருக்கு மூன்று மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று மகளுக்கும் திருமணம் முடிந்து வெவ்வேறு இடங்களில் தனது கணவருடன் வசித்து வருகின்றனர். மகன் குணசேகரன் மட்டும் குடும்பத்துடன் தந்தை வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வருகின்றார்.

சமீபத்தில் மூத்த மகளான காஞ்சனா மாலாவின்(55) கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து, காஞ்சனா தந்தை குமரேசனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி காஞ்சனா மந்தைவெளியில் உள்ள தனது சொந்தவீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று(மே.19) தேதி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது தந்தையின் வீடு கதவு பூட்டியிருந்ததைப் பார்த்து தம்பி குணசேகரனிடம் தந்தை எங்கே சென்றார் என கேட்டதற்கு குணசேகரன் தனக்குத் தெரியாது எனப் பதிலளித்துள்ளார். நீண்ட நேரமாகியும் தந்தை குமரேசன் வீட்டிற்கு வராததால் காஞ்சனாவும், குணசேகரனும் பல இடங்களில் தேடியும் தந்தை கிடைக்கவில்லை.

உடனே காஞ்சனா தனது உறவினர்களுடன் சேர்ந்து தந்தை அறையை உடைத்து பார்த்த போது, படுக்கை அறையில் ரத்த வாடை வீசியதுடன், ஆங்காங்கே ரத்தக்கறைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த காஞ்சனா, உடனே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தார்.

திடீரென தலைமறைவான மகன்: இதற்கிடையே தம்பி குணசேகரன் திடீரென தலைமறைவானதால் அவர் மீது மேலும் சந்தேகம் வலுத்தது. காஞ்சனா புகாரின் பேரில் காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நடத்திய விசாரணையில் எலக்ட்ரிகல் வேலை செய்து வரும் குணசேகரன் 19ஆம் தேதி முதல் செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அவர் கடைசியாகப் பேசிய செல்போன் டவர் லோக்கேஷனை வைத்து விசாரணை நடத்திய போது, 18ஆம் தேதி ராணிப்பேட்டை காவேரிபாக்கம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷிடம் பேசியிருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து வெங்கடேசனிடம் விசாரித்ததில் குணசேகரன் டைல்ஸ் கடை கட்ட வேண்டும் என்றும், அதற்கு ஒரு இடத்தை காண்பிக்குமாறும் கேட்டுள்ளார்.

பின்னர் குணசேகரன் டாட்டா ஏஸ் வண்டியில் ஒரு ட்ரம் மற்றும் மண் வெட்டியுடன் அந்த இடத்திற்குச் சென்று சுத்தம் செய்ய வேண்டும் என கூறி, வெங்கடேஷை அனுப்பி இருப்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அங்கிருந்த ஆடு மேய்ப்பவரிடம் தந்தை நன்றாக இருக்கவேண்டும் என பூஜை செய்த பொருட்களை புதைக்க இருப்பதாகவும், அதற்காக குழி தோண்டி தருமாறு கேட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்மையில் வாங்கிய நிலம்: இதையடுத்து காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சொத்துக்காக தனது தந்தையை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பேரலில் போட்டு ராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான நிலத்தில் புதைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து வளசரவாக்கம் காவல் துறையினர், குமரேசன் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த கொலை சொத்துக்காக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மகன் குணசேகரனைத் தேடி வருகின்றனர். இந்த கொலையில் அவரைத் தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

பெற்ற தந்தையை மகனே கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது தந்தையை கொலை செய்து அவரது உடலை இங்கு புதைப்பதற்காக அவர் இந்த இடத்தை வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கரண்ட் கட்டான நேரத்தில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை: நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.