ETV Bharat / city

சைபர் குற்றங்களை தடுக்க சமூக ஊடகக் குழு காவல்துறை அறிவிப்பு - சமூக ஊடகக் குழு

சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பும் நபர்களை கண்காணிக்க சமூக ஊடகக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களை தடுக்க சமூக ஊடகக் குழு காவல்துறை அறிவிப்பு

author img

By

Published : Sep 5, 2022, 10:00 PM IST

சென்னை: சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், கலவரங்களையும், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நபர்களை கண்காணிக்க சமூக ஊடகக் குழு ஒன்று தமிழ்நாடு காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சமூக வலைதளங்களில் பொய்யான வதந்திகள் பரப்புவதை தடுக்க சமூக ஊடக மையம் ஒன்று அமைக்கப்படும் என ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த குழுவில் சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. கணினிசார் திறன்,சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் இந்த குழுவில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இக்குழு இயங்க உள்ளது.

இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதை பொருள் விற்பனை, பணமோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுவர்களை எளிதில் கண்டுபிடிக்க இக்குழு செயல்பட உள்ளது.

மேலும் பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து வதந்தி பதிவுகளை நீக்கவும், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும்,கணினி சார் வழக்குகளை பதிவு செய்ய இக்குழு துரிதமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினால் சாதி, மத, அரசியல் மோதல்களை தடுத்திட இக்குழு உதவும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் அதன் மூலமாக நடக்கும் சைபர் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, சில நாட்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யாக பரவிய தகவலால் பெரிய கலவரமாக மாறிய சம்பவங்களும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாட்கரோ ஆப் மூலம் மோசடி... சிக்கிய கோவா ஜோடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.