ETV Bharat / city

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முதற்கட்டமாக நாளை தொடக்கம் - தமிழ்நாடு மின்சார வாரியம் - ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முதற்கட்டமாக நாளை தொடக்கம்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முதற்கட்டமாக நாளை (மார்ச்.01) சென்னை தியாகராய நகரில் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முதற்கட்டமாக நாளை தொடக்கம்

author img

By

Published : Feb 28, 2022, 11:06 PM IST

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் மூன்று கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் இருக்கின்றன.

மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை தியாகராய நகரில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் மின் இணைப்புகளில், முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் சோதனை அடிப்படையில் நாளை (மார்ச்.01) முதல் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில், இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால் மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் இத்திட்டத்தை சோதனை முறையில் தொடங்க முடிவெடுக்கப்பட்டு, திட்ட செலவாக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின் மின்சாரதுறை சார்ந்த ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பை நடத்தாமல் மென்பொருள் மூலம் மின் கணக்கெடுப்பு தேதி வரும்போது நேரடியாக மின் நுகர்வோரின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும், அதன்மூலம் நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிகிறது.

இந்தத் திட்டத்திற்கான வரவேற்பைப் பொருத்து தமிழ்நாடு முழுவதும் 2026ஆம் ஆண்டுக்குள் 3 கோடியே 60 லட்சம் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் எனவும் மின்வாரிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மகளை மீட்டு தரக்கோரி மனு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.