திருவள்ளூர்: பூந்தமல்லி, எல்லாபுரம் ஆகிய ஒன்றியங்களில் விலையில்லா தையல் இயந்திரம், மானியவிலை ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா மு நாசர் கலந்துகொண்டு 13 பயனாளிகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
![nasar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-trl-03-nascar-vis-scr-tn10036_19062021190055_1906f_1624109455_57.jpg)
இதைதொடர்ந்து திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பர்க்கத்துல்லாகான் தலைமையில் நடைபெற்ற ஒன்றியகுழு கூட்டத்தில் அமைச்சர் சா மு நாசர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணி செய்தால் உயர் பதவிகளை அடைய முடியும். எனவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்" என அமைச்சர் நாசர் கேடடுக்கொண்டார்.
இதையும் படிங்க: திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் திருக்கோயிலில் பொதுமக்கள் பங்கேற்பதற்குத் தடை