ETV Bharat / city

வாக்காளர் அட்டை.. ஆதார் எண் இணைப்பு.. எத்தனை பேர் தெரியுமா.. - Sixteen million and above Number of people

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இதுவரை 1,66,42,608 பேர் இணைத்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 1, 2022, 4:45 PM IST

Updated : Sep 1, 2022, 10:48 PM IST

சென்னை: இதுவரை ஆதாருடன், வாக்காளர் அடையாள அட்டையை பதினாறு மில்லியனுக்கும் அதிகமானோர் இணைத்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஆக.1 ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 6,21,72,922 வாக்காளர்களில், 1,66,42,608 பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தனர்.

இதற்கு வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் "6பி" படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.

அதேபோல, தேசிய வாக்காளர் சேவை அமைப்பான 'என்.வி.எஸ்.பி. போர்ட்டல்' (https://www.nvsp.in), வாக்காளர் சேவை எண் '1950' போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.

இதையும் படிங்க: 'பள்ளிக்கல்விக்கு நிதி தாருங்கள்' - நிதியமைச்சரை சந்திக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

Last Updated : Sep 1, 2022, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.