செங்கல்பட்டு : கேளம்பாக்கம் பகுதியில், சுஷில் ஹரி உண்டு - உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் நிறுவனரான சிவசங்கர் பாபா அப்பள்ளியில் பயின்ற மாணவிகளிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை ஜூலை 1ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபா குணமடைந்ததை தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே சிவசங்கர் பாபாவை விசாரிக்க அனுமதிகோரி சிபிசிஐடி போலீசார் தரப்பில் தாக்கல் செய்த மனு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையும் படிங்க : தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையில் அமெரிக்காவைத் தாண்டிய இந்தியா