ETV Bharat / city

தனது 5 வயது தம்பியை அடித்துக் கொன்ற இளம்பெண் கைது - சிறுவன் உயிரிழப்பு

தாம்பரம் அருகே தனது ஐந்து வயது தம்பியைத் துன்புறுத்தி, அடித்துக் கொலைசெய்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

5 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த அக்கா கைது

author img

By

Published : Sep 18, 2021, 1:19 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி சூசைமேரி. இவர்களுக்கு ஆபேல் என்ற ஐந்து வயது மகன் இருந்தார்.

தியாகராஜன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சூசைமேரி தினக் கூலி வேலைக்குச் சென்றுவருவதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதனால் பெருங்களத்தூர் வேல் நகர் எம்ஜிஆர் தெருவிலுள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு நான்கு மாதத்துக்கு முன் குழந்தை ஆபேலை அனுப்பியுள்ளார்.

சூசைமேரியின் சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மகள் மேரி (20) குழந்தை ஆபேலை கவனித்துவந்துள்ளார்.

குழந்தை உயிரிழப்பு

இந்நிலையில் நேற்று (செப். 17) குழந்தை ஆபேல் திடீரென மயக்கம் அடைந்ததாகக் கூறி அவசர ஊரதி மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, ஆபேலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக இது குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்துவந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் உண்மை அம்பலம்

அப்போது சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள், அடித்த அடையாளங்கள் இருந்துள்ளன. இதனைக் கண்ட காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். முதற்கட்டமாக சிறுவனை கவனித்துவந்த மேரியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த நான்கு மாதங்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுவன் ஆபேலை அடித்து துன்புறுத்திவந்தது தெரியவந்தது. மேலும், செப்டம்பர் 16ஆம் தேதியன்று இரவு மேரி அடித்ததின் காரணமாகவே குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து மேரியை கைதுசெய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமை - தந்தை உள்பட இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.