சென்னை: காமராஜர் சாலையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் தொழில் நுட்பப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார், பிரசன்னா. இவர் நேற்று முன் தினம் (அக்.18) சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பிரசன்னாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி ஆய்வாளர் உடலுக்கு டிஜிபி அஞ்சலி
மேலும், விபத்தை ஏற்படுத்திய வடபழனியைச் சேர்ந்த ராஜ்குமாரை மெரினா காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் பிரசன்னாவின் உடலுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், பிரசன்னாவின் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாலையைக் கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் கார் மோதி மரணம்