கரோனா ஊரடங்கால் வேலையிழந்து, உணவு, உறைவிடமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே பயணித்த சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயிலை மத்திய அரசு தற்போது இயக்கத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு சேர்க்க, தென்னக ரயில்வே சார்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில் நேற்று இரவு புறப்பட்டது. மொத்தம் 1081 பயணிகளுடன் மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் ரயில் நிலையம் வரை இந்த ரயில் பயணிக்கிறது.
அதே போல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 881 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குலத்துக்கு மற்றுமொரு சிறப்பு ரயிலும் புறப்பட்டது.
ரயிலில் ஏற்றப்படும் முன் அனைவரது உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி சார்பாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு இந்த வெளிமாநில பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : 'அண்ணா பல்கலைக்கு சீர்மிகு அந்தஸ்து வழங்க வழிகை செய்யுங்கள்'