ETV Bharat / city

'நிலுவையிலுள்ள அபராதங்களை உடனே கட்டவேண்டும்.. இல்லாவிடில்...' - வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சென்னையில் நிலுவையிலுள்ள 5 லட்சத்திற்கும் மேலான அபராத செலான்களை (இ-சலான்) வசூலிக்கும் விதமாக 10 போக்குவரத்து காவல் அழைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த முறை இதனைப் பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் தவறாமல் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எச்சரிக்கை
எச்சரிக்கை
author img

By

Published : Apr 11, 2022, 6:17 PM IST

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தத் தவறிய வாகன ஓட்டிகளை அழைக்க போக்குவரத்து உதவி ஆணையர்கள் தலைமையில் 10 போக்குவரத்து அழைப்பு மையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதன்படி, வேப்பேரியில் போக்குவரத்து அழைப்பு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், 'சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஒரு நாளைக்கு 10,000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதச் செலான்கள் (இ-சலான்) போக்குவரத்து போலீசாரால் அனுப்பப்படுவதாகவும், குறிப்பாக அண்ணா நகரில் ஒரு குறிப்பிட்ட ஜங்ஷனில் மட்டும் 7ஆயிரம் செலான்கள் தினமும் போடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

10 போக்குவரத்து அழைப்பு மையங்கள்: புதியதாக 12 இடங்களில் 14 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், விதிமீறல்கள் பல மடங்கு உயர்ந்து ஒரு நாளைக்கு 1 லட்சம் அபராத செலான்கள் வரை போட வாய்ப்புள்ளது. ஆனால், வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை சரிவர கட்டாத காரணத்தினால், சென்னையில் முதற்கட்டமாக 10 போக்குவரத்து அழைப்பு மையங்கள் தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அலட்சியம் செய்தால் நீதிமன்றம் செல்ல நேரிடும்: மேலும், அபராதம் விதிக்கப்பட்டுள்ள வண்டி எண்கள் மூலமாக செல்போன் எண்ணை வைத்துதொடர்பு கொண்டு, அபராதத்தொகையை செலுத்த வலியுறுத்தப்படும். அதன்படி, பல செலான்களுக்கு அபராதத்தொகை செலுத்தாத நபர்களின் வீட்டிற்குச் சென்று கூறத் திட்டமிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் செலான்களை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு வாரண்டு பிறப்பித்து நடவடிக்கை எடுக்கத்திட்டமிட்டுள்ளது என்று சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

5 லட்சத்திற்கும் மேலானவர்களின் அபராதம் நிலுவை: சென்னையில் ஒரு நாளில் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் செலான்கள் போடப்படுகிறது. அதில், 2 ஆயிரம் செலான்களுக்கான அபராதத் தொகை மட்டுமே கட்டப்படுவதால், தற்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட அபராத செலான்கள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது, மத்திய அரசு கொண்டு வந்த புதிய அபராதத்தொகை திட்டத்தை போக்குவரத்து துறையினருடன் ஆலோசனை நடத்தி நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி முறையில் அபராதத் தொகையை செலான்களாக அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், அபராதத்தொகை செலுத்த வேண்டியவர்கள் கிரெடிட் கார்டு, தபால் நிலையம் உள்ளிட்ட 6 வழிகளில் செலுத்த முடியும் என்று கூறினார். மேலும், சென்னையில் 12% சி.சி.டி.வி கேமராக்கள் பழுதடைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அதுகுறித்து அரசிடம் முறையிட்டுள்ள நிலையில், கூடிய விரைவில் அவற்றை சரிசெய்ய திட்டமிட்டுள்ளது என்றும் சங்கர் ஜிவால் கூறினார்.

சென்னை காவல் ஆணையர் -நிலுவையிலுள்ள அபராதத்தை செலுத்த அறிவுறுத்தல்
பைக் ரேஸ் செய்யக்கூடாது என எச்சரிக்கை: மேலும், பைக் சாகசங்கள் மற்றும் ரேஸ்களில் ஈடுபட்ட 41 இளைஞர்களிடம் நன்னடத்தை விதிமீறல் சான்றிதழில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. இது போன்று, வாகன ஓட்டிகள் பிற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் 308 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, அண்ணா சாலையைத் தொடர்ந்து நந்தனம் பகுதி சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னையில் 36 சிக்னல்கள் பழுதடைந்து இருப்பதால், முதற்கட்டமாக ஒரு மாதத்திற்குள் 10 சிக்னல்களை சரிசெய்ய உள்ளது. போக்குவரத்து அழைப்பு மையங்களில் இருந்து காவலர்களால் அழைக்கப்படும் தொடர்பு எண்கள் பெரும்பாலும் Wrong Number-களாக இருப்பதாகவும், வாகனங்களை வாங்கியபோது கொடுத்த எண்களை வாகன ஓட்டிகள் மாற்றியிருக்கலாம் என்பதால் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஒரு சிலர் அபராதத்தை செலுத்தக்கூறும்போது, இணைப்பைத் துண்டித்து விடுவதாகவும் போக்குவரத்து காவலர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இ-சலான் மூலம் அபராத தொகை வசூலிக்கும் காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.