சென்னை: இந்த ஆண்டின் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி நிகழ்வான சாஸ்த்ரா, இணையம் வாயிலாக நான்கு நாட்கள் நடத்தப்படும் எனக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சாஸ்த்ரா 2021இல் பல்வேறு பயிலரங்கங்களும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதில் வெல்லும் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும். கரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டின் அனைத்து நிகழ்வுகளும் இணையம் வாயிலாக தான் நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
CES 2021: காட்சிப்படுத்தப்பட்ட புதிய ஆசஸ் மடிக்கணினிகள்!
அதன்படி இந்த நிகழ்வும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் மாணவர்கள் முன்பதிவு செய்துகொள்ள tif.shaastra.org என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் முன்பதிவுக்கான கடைசி நாள் ஜனவரி 21ஆம் தேதியாகும்.
இதுகுறித்து மேம்பட்ட தகவல்களை அறிந்துகொள்ள (+91)89216 88892 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.