ETV Bharat / city

சிவசங்கர் பாபா பிணை மனு - விசாரணையைத் தள்ளிவைத்த நீதிமன்றம் - சிவசங்கர் பாபா வழக்கு

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, பிணைகோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

பாலியல் தொல்லை சிவசங்கர் பாபா வழக்கு
பாலியல் தொல்லை சிவசங்கர் பாபா வழக்கு
author img

By

Published : Aug 12, 2021, 7:39 PM IST

சென்னை: பாலியல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சிவசங்கர் பாபாவின், இரண்டு பிணை மனுக்களை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றமும், மாவட்ட முதன்மை நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இதையடுத்து இரு வழக்குகளில் பிணைகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (ஆகஸ்ட் 12) விசாரணைக்கு வந்தது.

அப்போது, புகார் அளித்த பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2015, 2018, 2020ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் கொடுத்தப் புகார்களில், இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போக்சோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3 முறை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

புகாரில் உண்மைத் தன்மை இல்லை

மேலும், புகார் அளித்த மாணவிகளில் ஒருவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து சென்ற பிறகும், 20 நடன நிகழ்ச்சிகளை சிவசங்கர் பாபாவின் பள்ளியில் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த, 2015ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறும் மாணவி ஒருவர், 2019ஆம் ஆண்டு பாபா குறித்தும் அவருடைய பள்ளியை குறித்தும் புகழ்ந்து சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த கருத்துகளும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி

இவ்வழக்கில் கைதான பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று திரும்பியதாக அவர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, வெறும் புகாரின் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனவும் அவர் வாதிட்டார்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலேயே வெவ்வேறு மாதங்களில் 3 முறை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

சிவசங்கர் பாபா வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்தப் புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி காவல் துறையினர் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் வைத்து கைதுசெய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.