ETV Bharat / city

9 வயதிலிருந்து பாலியல் தொந்தரவு... இளம்பெண்ணின் தாய், அத்தை உள்ளிட்ட 3 பேர் கைது - 9 வயதிலிருந்து பாலியல் தொந்தரவு

தனியார் காப்பகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக காப்பக நிர்வாகியின் உறவினர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு 9 வயதிலிருந்து உறவினர்களும் பாலியல் தொந்தரவு கொடுத்தனர் என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணின் தாய், அத்தை உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இளம்பெண்ணின் தாய், அத்தை உள்ளிட்ட 3 பேர் கைது

author img

By

Published : Apr 2, 2022, 5:49 PM IST

சென்னை: பெரவள்ளூரில் உள்ள தனியார் காப்பகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக அதன் நிர்வாகியின் உறவினர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 31) விசாரணைக்கு வந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் (21) காப்பக நிர்வாகியின் உறவினர் மட்டுமல்லாமல், தனக்கு 9 வயதிலிருந்து உறவினர்களும் பாலியல் தொந்தரவு கொடுத்தனர் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர் லலிதா இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவம் தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 1) புகார் அளித்தார். அந்தப் புகாரில் பல திடுக்கிடும் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இளம்பெண்ணுக்கு ஒரு வயது இருக்கும்போது அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். எனவே, அவரது தாய் வேறு ஒருவருடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை உறவினர் ஒருவருக்கு வளர்ப்பு மகளாக, அவரது தாய் கொடுத்துள்ளார்.

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: இந்நிலையில் இளம்பெண்ணிற்கு உறவினர்களான தேசப்பன், சிவா, சீனிவாசன், ரமேஷ் ஆகியோர் தாய் சாந்தி, அத்தை ரேவதி துணையுடன் 9 வயதிலிருந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியை தூவி கொடுமைப்படுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு மனஉளைச்சல் ஏற்பட்டு வீட்டிலிருந்து இளம்பெண் வெளியேறி பிராட்வே மண்ணடி பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.

பாதுகாப்பு கிடைக்கவேண்டிய இடத்தில் பாலியல் தொந்தரவு: அவரைப் பார்த்த அப்பகுதி மக்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே, இளம்பெண்ணை மீட்ட அலுவலர்கள் பெரவள்ளூரில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து காப்பக நிர்வாகி இசபெல்லாவிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார். காப்பக நிர்வாகி நடவடிக்கை எடுக்கவில்லை. இதை அறிந்த காப்பக நிர்வாகியின் உறவினர் அதே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதன்காரணமாக இளம்பெண் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காப்பக நிர்வாகி உறவினர் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காப்பக நிர்வாகியின் உறவினர் கைது செய்யப்பட்டார்.

நீதிபதியிடம் வாக்குமூலம்: இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதியிடம் காப்பக நிர்வாகியின் உறவினர் மட்டுமில்லாமல் சிறுவயது முதல் உறவினர்களும் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளம்பெண் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் பாலியல் தொந்தரவுக்கு துணையாக இருந்த இளம்பெண்ணின் தாய் சாந்தி, அத்தை ரேவதி மற்றும் இளம்பெண் பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காப்பக நிர்வாகி இசபெல்லா ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இளம்பெண்ணின் உறவினர்கள் 4 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலீஸ் கண்முன்னே தவறாக நடக்க முயன்றவரை வெளுத்து வாங்கிய பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.