ETV Bharat / city

Idol Theft Issue: 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கோயில் சிலைகள் மீட்பு - minister sekarbabu visits temple at chennai

Idol Theft Issue: திமுக ஆட்சிக்கு வந்த ஏழு மாதங்களில், 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கோயில் சிலைகளை மீட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

author img

By

Published : Dec 28, 2021, 7:17 PM IST

சென்னை: Idol Theft Issue:நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சட்ட மன்ற மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,

முதலமைச்சர் ஸ்டாலினின் பொற்காலம்

”மானியக் கோரிக்கையில் 112 அறிவிப்புகள் துறை சார்பாக அறிவிக்கப்பட்டதாகவும், அதில் 600-க்கும் மேற்பட்ட பணிகளிலிருந்த நிலையில் ஏழு மாதத்தில் 450 பணிகளுக்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1,500 கோடி மதிப்புகள் சொத்துக்கள், 456 நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதலமைச்சர் ஸ்டாலினின் காலம் பொற்காலம்.

இன்று அலுவலர்களுடன் ஏழாவது முறையாக திட்டங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோயில்களில்
தரமான குங்குமம், விபூதி வழங்குவது, முதலுதவி மையங்கள் ஏற்படுத்துதல், புதுப்பிக்க வேண்டிய குளங்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தருவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை

இதுவரை 551 கோயில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் கோயிலில் பணியாற்றுபவர்களுக்கு புத்தாடை வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.

இரண்டு கோயில்களுக்கு லிஃப்ட் வசதி ஏற்படுத்துவது குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட்டது. சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மூத்தோரைப் பாதுகாக்க குடியிருப்பு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கோயில் சிலைகளைப் பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன கோயில் சிலை உள்பட 20 இடங்களில் திருடு போன சிலையை மீட்டுள்ளோம்.

ஒமைக்ரானின் பரவல் தன்மை குறித்து ஆராய்ந்து பக்தர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறு இல்லாமல் முதலமைச்சர் முடிவெடுப்பார்.

நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

30 மற்றும் 31ஆம் தேதிகளில் முதலமைச்சர் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்படும். அதன் பின் முடிவுகளை முதலமைச்சர் அறிவிப்பார்.

கோயில்களில் தீ விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆராயும் பொருட்டு தணிக்கைக் குழு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இடியும் நிலையில் சிதலமடைந்த கோயில்கள் குறித்து தகவல் கிடைத்த உடனே துறை சார்ந்த பொறியியல் அலுவலர்கள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வர்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையில் விரைவில் மின்சார ரயில் சேவை தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.