ETV Bharat / city

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! - சென்னை அண்மை செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் காலம் தாழ்த்துவது வருத்தம் அளிக்கிறது, எழுவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

author img

By

Published : Jan 21, 2021, 8:57 PM IST

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், பரபரப்பான தேர்தல் பிரசாரத்திற்கு இடையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணைப்பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர்கள் 60க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் நிறைவு பெற உள்ள நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திய திமுக நிர்வாகிகளை பாராட்டியும், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டும்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும். மார்கழி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதிமுக இந்தியாவில் அதிக அளவு ஊழல் செய்கிறது அதற்கு கண்டனம் தெரிவித்தும், பொள்ளாச்சி வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.