ETV Bharat / city

கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் ரத்து! - பூர்ணசந்திரன்

சென்னை: கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

hc
hc
author img

By

Published : Oct 29, 2020, 12:22 PM IST

கல்லூரி கல்வி இயக்குநராக இருந்த சாருமதி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றதையடுத்து பூர்ணசந்திரன் கல்லூரி கல்வி புதிய இயக்குநராக கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பணிமூப்பில் உள்ள தன்னை நியமிக்காமல் கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், பணி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால், தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் இருந்தே நியமனம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே அவர் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், பூர்ணசந்திரன் நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 29) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுதான் கல்லூரி கல்வி இயக்குநர் பதவி நிரப்பப்பட வேண்டும் என்று, வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நடுவானில் இயந்திர கோளாறு: துரிதமாக செயல்பட்டு தரையிறக்கிய விமானி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.