சென்னை: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பிரதான சாலையில் செம்பாக்கம் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கட்டிடம் உள் பகுதியில் குடிநீர் மேல் தேக்க தொட்டி அமைந்துள்ளது.
இந்த தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நீர் தேக்க தொட்டியின் படிக்கட்டின் காங்கிரீட் உடைந்து கம்பிகள் சேதமடைந்து காணப்படுகிறது. எந்த நேரத்திலும் படிக்கட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதால், படிக்கட்டில் ஏறி நீர்தேக்க தொட்டியின் குடிநீர் அளவை பார்பதற்கு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, இதனை உடனடியாக சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.