ETV Bharat / city

'தேவையில்லாத பல அவைக்குறிப்பில் இருக்கும்போது, ஜெயலலிதா குறித்து பேசியதை நீக்க வேண்டியதில்லை' - அமைச்சர் பொன்முடி - அமைச்சர் பொன்முடி

கலைஞர் உடல் நிலை குறித்தும் முதலமைச்சரை ஸ்கூல் பிள்ளை என்றும் அப்போதைய அதிமுக அமைச்சர்கள், உறுப்பினர்கள் பேசியதெல்லாம் அவை குறிப்பில் இருக்கும்போது, செல்வப்பெருந்தகை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியதை நீக்கவேண்டியதில்லை என்று தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.28) அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
author img

By

Published : Apr 28, 2022, 8:38 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.27) தஞ்சை தேர் விபத்து குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, கும்பகோணம் மகாமகத்தில் நடந்த விபத்து குறித்தும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் விமர்சித்து பேசி இருந்தார்.

இதற்கு அதிமுகவினர், அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி அதிமுகவினர் எதிர்க்கட்சித் தலைவர் எட்பபாடி பழனிசாமி தலைமையில் அவைக்குள்ளேயே சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைஞர் குறித்து விமர்சனம்: சட்டபேரவையில் இன்று (ஏப்.28) நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, நீண்ட விளக்கத்தை அளித்தார். அதில், ’கலைஞரின் உடல்நிலை குறித்தும் அவரின் இளமைப்பருவம் குறித்தெல்லாம் கடந்த காலங்களில் பேரவையில் அதிமுக அமைச்சர்கள், உறுப்பினர்கள் பேசி இருக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தெல்லாம் பேசி இருக்கிறார்கள்’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

நீங்கள் நீக்கினீர்களா? என்று கேள்வி: மேலும், பேசிய அமைச்சர் பொன்முடி, ’இப்படியெல்லாம் பேசி அமைச்சரானவர் தான் விஜயபாஸ்கர். கலைஞர் குறித்து பேசியதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு எல்லாம் நடந்தது தெரியும். அப்போது பேசியதை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது, வலியுறுத்தினோம். ஆனால், நீங்கள் நீக்கவில்லை’ என்று பொன்முடி தெரிவித்தார்.

இதேபோன்று தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வையும், அம்மையார் அவையில் பேசியதையும் செல்வப்பெருந்தகை மறுபடியும் வாசித்துள்ளார். எனவே, காங்கிரஸ் உறுப்பினர் பேசியதை அவைக்குறிப்பில் நீக்கவேண்டியது இல்லை என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழா - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.