நெதா்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில், வந்த பாா்சல்களை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
அப்போது, சென்னை, திருப்பூர் முகவரிகளுக்கு வந்திருந்த இரண்டு பாா்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, சுங்கத்துறை அலுவலர்கள் பாா்சல்களைப் பிரித்து பாா்த்து சோதித்தனா். அந்த இரு பாா்சல்களில் 165 போதை மாத்திரைகள் இருந்தன.
இவைகளின் சா்வதேச மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பின்னர், சுங்கத் துறையினா் போதை மாத்திரைகளைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில், சென்னை,திருப்பூா் ஆகிய இரண்டு முகவரிகளுமே போலியானவை என்று தெரியவந்தது.
மேலும் போலி முகவரியில் வெளிநாட்டிலிருந்து போதை மாத்திரைகளை இந்தியாவிற்கு கடத்திவந்த ஆசாமிகளை சுங்கத் துறையினா் தேடிவருகின்றனா்.