சென்னை: துபாயில் இருந்து ஏா்இந்தியா சிறப்பு விமானம் இன்று சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறையினா் சோதனையிட்டனா்.
சக்கர நாற்காலியில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது அபூபக்கர் ஜெனுலபூதின் (62) என்ற பயணி மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவரின் பேண்ட் பாக்கெட்டில் 465 கிராம் மதிப்பிலான நான்கு தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 19.78 லட்சம் ஆகும்.
சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - Chennai airport
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.19.78 லட்சம் மதிப்பிலான 465 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.