ETV Bharat / city

பழங்குடியின மாணவர்களுக்கான உதவித் தொகை வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

author img

By

Published : Aug 4, 2020, 5:44 PM IST

சென்னை: தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை நிலுவையை உடனே செலுத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seeking Stipend Settlement
Seeking Stipend Settlement

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில், அதன் பொது செயலாளர் பழனியப்பன் தொடர்ந்துள்ள வழக்கில், "தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்ணங்களும் அரசே செலுத்தும். ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலுத்தவில்லை. இது தொடர்பாக தற்போது வரை பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

எனவே, நிலுவை தொகையை உடனடியாக அந்தந்தக் கல்லூரிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, இது குறித்து தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.