ETV Bharat / city

குடியரசுத்தலைவர் நாளை சென்னை வருகை! - பாதுகாப்பு அதிகரிப்பு! - ராம்நாத் கோவிந்த் திருப்பதி வருகை

சென்னை: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் நாளை சென்னை வருவதையொட்டி சென்னை பழைய விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ramnath
ramnath
author img

By

Published : Nov 23, 2020, 12:20 PM IST

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை காலை 6.30 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து, தனி விமானம் மூலம் காலை 9.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறாா். அங்கு அரசு சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்பு 9.45 மணிக்கு அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் அவர் திருப்பதி புறப்பட்டுச் செல்கிறாா்.

அதன்பின், நாளை மாலையே திருப்பதியிலிருந்து சென்னை திரும்பும் குடியரசுத்தலைவர், மாலை 5.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறாா்.

குடியரசுத்தலைவர் நாளை சென்னை வருகை! - பாதுகாப்பு அதிகரிப்பு!

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் திட்டம் இல்லை. இதனால் பழைய விமான நிலையத்தில் இன்று காலையிலிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ராம்நாத் கோவிந்த் வரும் விமானம், அவா் பயணிக்கவிருக்கும் ஹெலிகாப்டா் ஆகியன நிற்கும் பகுதிகள், முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதோடு விமான நிலையத்திற்கு பணியாற்ற வரும் ஊழியா்கள் அனைவரும் பலத்த சோதனைகளுக்கு பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். உரிய பாஸ் மற்றும் அடையாள அட்டை இல்லாதவா்களுக்கு அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.