ETV Bharat / city

வாக்கு எண்ணிக்கையின்போது பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை அழிக்கக்கூடாது - நீதிமன்றம் - உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பதிவுசெய்யப்பட்ட காணொலி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை முடிவுகள் வெளியிடப்பட்ட 60 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற செய்திகள்
நீதிமன்ற செய்திகள்
author img

By

Published : Oct 29, 2021, 5:32 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நசீம்பி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பெட்டிகளின் மீது வைக்கப்படும் முத்திரைகள், வேட்பாளர்களின் முன் அகற்றப்பட வேண்டும் என்பதை மீறி, சில வார்டுகளின் வாக்குப்பெட்டிகளின் முத்திரைகள் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நசீம்காத்து என்பவரின் வெற்றியை எதிர்த்து விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது பதிவுசெய்யப்பட்ட காணொலிக் காட்சிகளையும், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலிப் பதிவுகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 45 நாட்கள் பாதுகாக்கப்படும் எனவும், காணொலிப் பதிவுகளை பாதுகாக்கும்படி, தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசுத்தரப்பிலும், மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, காணொலிப் பதிவுகளை 60 நாட்கள் வரை பாதுகாக்கும்படி அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார்கள் வந்தால் காணொலிப் பதிவுகளை பெற்று பாதுகாக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணையின் உண்மை கதை... வதந்திகளை உடைத்தெறியும் பகுப்பாய்வு: சிறப்புப் பார்வை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.