ETV Bharat / city

'வருவாய் ஈட்டும் மனநிலையில் கமல் உள்ளார்' - ம.நீ.ம-வில் இருந்து விலகிய சரத்பாபு பகீர்! - மநீமவில் இருந்து விலகிய சரத் பாபு

மக்கள் நீதி மய்யத்தில் மாநிலச்செயலாளராகப் பதவி வகித்து வந்த சரத்பாபு இன்று(மே.25) கட்சியிலிருந்து விலகியதாக கட்சித் தலைமைக்கு விலகல் கடிதம் எழுதியுள்ளார்.

வருவாய் ஈட்டும் மனநிலையில் கமல் உள்ளார்
வருவாய் ஈட்டும் மனநிலையில் கமல் உள்ளார்
author img

By

Published : May 25, 2022, 4:04 PM IST

சென்னை: சரத்பாபு தன்னார்வத்தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் 2021ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் ஆலந்தூர் சட்டப்பேரவைத்தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக கடந்த ஆண்டு போட்டியிட்டார். கணிசமாக வாக்குகளையும் பெற்றார்.

இதனால் இவருக்கு மாநிலச்செயலாளர் பதவி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று(மே.25) காலை கட்சியிலிருந்து தான் விலகுவதாக கட்சித் தலைமைக்கு அவர் விலகல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய கடிதத்தில், "கமல்ஹாசன் அவர்கள் ஈடுபாடு இரண்டு உள்ளாட்சித் தேர்தல்களிலும் மிகவும் குறைவாக இருப்பதைக் காண முடிந்தது. அதன்பிறகு அவரின் ஈடுபாடு கட்சியில் வெகுவாக குறைந்து, வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாக சென்றுவிட்டார். இதனால் தமிழ்நாட்டில் இக்கட்சியினால் எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டு சேர்க்க முடியாது என்ற நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியலமைப்புச் சட்டம் பெரிதா? ஆளுநர் பெரிதா? - திருமாவளவன் திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.