ETV Bharat / city

"கடைகளுக்குச் சீல் வைப்பு" - தமிழ்நாடு அரசு அதிரடி

author img

By

Published : Mar 21, 2022, 4:59 PM IST

Updated : Mar 21, 2022, 7:48 PM IST

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்குச் சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Sealed banned plastics use stores in state state report filed MHC

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் 14 வகையான பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தியதாக 36 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முதல் சோதனையில் சிறு வணிக நிறுவனங்கள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தற்போது அபராதம் விதிக்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத்தாவிட்டால், அந்த கடைகளுக்குஸ் சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குச் சீல் வைக்கப்படுவதாக கூறினாலும், அவை தொடர்ந்து கிடைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாகத் தடுக்கும் வகையில் எல்லைகளில் சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினர்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: பெண்களுக்கு கல்வி தான் முக்கியம்; திருமணம் அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Mar 21, 2022, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.