தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2013-2014 ஆம் கல்வியாண்டில் 1,07,157 இடங்களில் 49,864 மாணவர்களும், 2014-2015 ஆம் கல்வியாண்டில் 1,16,004 இடங்களில் 86,729 மாணவர்களும், 2015-2016 ஆம் கல்வியாண்டில் 1,17,232 இடங்களில் 94,811 மாணவர்களும், 2016-2017 ஆம் கல்வியாண்டில் 97,506 மாணவர்களும் சேர்க்கப்பட்டனர்.
அதேபோல், 2017-2018 ஆம் கல்வியாண்டில் 90,607 மாணவர்களும், தற்போது 2018-2019 ஆம் கல்வியாண்டில் 66,269 மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் 2013-2014 முதல் 2016-2017ஆம் கல்வியாண்டு வரை மாணவர்களுக்கான கல்விக் கட்டணமாக 401.98 கோடி ரூபாய் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2018-2019 ஆம் ஆண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்கள் 66,269 பேர் உட்பட தனியார் பள்ளிகளுக்கு 304 கோடி ரூபாய் வழங்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி - ஆய்வுக்கு உத்தரவு!