இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசால் செயல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தற்போது சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அரசு அலுவலகங்கள் செயல்படுவது குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், மே 18ஆம் தேதி முதல் வாரத்திற்கு ஆறு வேலை நாட்களும் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் எனவும், 50 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து வகை பணியாளர்களும் வரும் 18ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். தனிநபர் இடைவெளியை பின்பற்றிட வசதியாக சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டிய பணியாளர்கள் குறித்து 18ஆம் தேதி அறிவுரை வழங்கப்படும் ” எனக் கூறியுள்ளார்.
இதேபோல், தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்களும் 18ஆம் தேதி முதல் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சனிக்கிழமையும் பணிக்கு வர வேண்டும்' - ஊழியர்களுக்கு அரசு ஆணை!