தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற கரோனா பாதிப்புக் குறைவான பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் வேறு வழியின்றி இங்கு திறப்பதாக அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்னும் கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் இல்லத்தை நோக்கி ஆகாஷ், விஷ்டோரியா, ஆதர்ஷ், சபரி, சுப்ரியா ஆகிய 5 சிறுவர்கள் 30 கிமீ நடைபயணம் மேற்கொண்டனர். 'குடியை விடு, படிக்க விடு’ என்ற பதாகைகளை ஏந்தியவாறு படூர் முதல் முதலமைச்சர் இல்லம் வரை முகக்கவசங்களை அணிந்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தனர். இதையறிந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மதுக்கடைத் திறப்பு பாதுகாப்பு விவரங்கள்