சென்னை: செயிண்ட்-கோபைன் இந்தியா, காஞ்சிபுரத்தில் உள்ள ஐஐஐடிடிஎம் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க 2.29 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளது. இதனால் 8 ஆண்டுகளில் 40 மாணவிகளுக்கு உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது.
செயிண்ட்-கோபைன் இந்தியா மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் பி.டெக் படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தாெகை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பிடெக் படிப்பில், கம்ப்யூட்டர் அறிவியல், மின்னணுவியல் மற்றும் இயந்திர பொறியியல் ஆகியவற்றில் சேரும் மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: JEE தேர்வில் முதலிடம் பிடித்த கோவை மாணவிக்கு பாராட்டு விழா