ETV Bharat / city

அதிமுக எம்எல்ஏவிடமிருந்து மகளை மீட்டுத்தர தந்தை ஆட்கொணர்வு மனு - கள்ளக்குறிச்சி

சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவால் கடத்தப்பட்ட தனது மகளை மீட்க கோரிய சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நாளை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

marriage
marriage
author img

By

Published : Oct 6, 2020, 12:10 PM IST

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் பிரபுவும், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி திடீரென அவர் மாயமாகியுள்ளார்.

இந்நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி, சௌந்தர்யாவை திருமணம் செய்த புகைப்படத்தையும், இத்திருமணத்திற்கு மறுத்ததால் வீட்டை விட்டு வெளியேறி தன்னை முழுமனதுடன் சௌந்தர்யா திருமணம் செய்துகொண்டதாக காட்சிப்பதிவையும் பிரபு வெளியிட்டார்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்துதான் தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுவாமிநாதன், தியாகதுருகம் காவல் நிலையத்தில் சௌந்தர்யாவின் தந்தை புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர்.

இதனையடுத்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவால் தன் மகள் கடத்தப்பட்டதாகவும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கல்லூரி படிக்கும் பெண்ணிடம் பிரபு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சுவாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் நாளை இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: துறை ரீதியான 'கண்டன' நடவடிக்கை விருப்ப ஓய்வை பாதிக்காது - நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.