ETV Bharat / city

’ரெய்டு நடப்பது தெரியுமா என்றால், தெரியாது என்கிறார் சத்யபிரதா சாகு’

சென்னை: தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரியுடனான ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ceo meet
ceo meet
author img

By

Published : Mar 26, 2021, 9:46 PM IST

Updated : Mar 26, 2021, 10:12 PM IST

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிவது மற்றும் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் அணியின் பாபு முருகவேல், வருமான வரித்துறை சோதனைக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார். தொடர்ந்து பேசிய திமுகவின் நீலகண்டன், கடந்த தேர்தலை அடிப்படையாகக் கொண்டு பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறுமுக நயினார் கூறும்போது, ”தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உங்களின் அனுமதியோடு தான் தேர்தல் நேரத்தில் ரெய்டுகள் நடக்கிறதா என்று கேட்டதற்கு, தனக்கு தெரியாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். வருமான வரிச்சோதனை தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரியாமல் நடைபெறுவது தேர்தல் விதிக்கு புறம்பானது. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கே தெரியாமல் ரெய்டு நடப்பதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்வோம்” என்றார்.

’ரெய்டு நடப்பது தெரியுமா என்றால், தெரியாது என்கிறார் சத்யபிரதா சாகு’

இதேபோல், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் நேர வருமான வரிச்சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அக்கட்சியின் நவாஸ் கூறினார். கூட்டத்தில் பாஜக சார்பில் கலந்து கொண்ட கராத்தே தியாகராஜன், சோதனைக்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என்றார்.

இதையும் படிங்க: செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார்!

Last Updated : Mar 26, 2021, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.