ETV Bharat / city

கரோனா காலத் தேர்தல்! - சத்யபிரதா சாகு ஆலோசனை! - சட்டப்பேரவைத் தேர்தல்

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

discusses
discusses
author img

By

Published : Jan 12, 2021, 7:01 PM IST

சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம், அரசியல் கட்களுடனான ஆலோசனை என தொடர் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கரோனா பரவல் காரணமாக தேர்தல் நாளன்று மக்கள் அதிகமாக கூடாமல் ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேர் மட்டுமே வாக்கு செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இவைகள் குறித்தும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய் தொற்று காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் தொடர்பான வழிமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு- ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.