ETV Bharat / city

ஜெயலலிதா மரணம்: 'எது உண்மையோ அதனை திரையிட்டு மறைக்க முடியாது' - சசிகலா - ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த தகவல்கள் கடவுளுக்குத் தெரிந்த உண்மை; நேற்று மக்களுக்கும் தெரிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

சசிகலா பேட்டி
சசிகலா பேட்டி
author img

By

Published : Mar 23, 2022, 9:30 PM IST

சென்னை: தியாகராய நகரில் சசிகலா அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய சசிகலா, 'உடல்நிலை சரி இல்லாதபோது கட்சித்தொண்டர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வேண்டுதல் வைத்திருந்தனர். அதனை நிறைவேற்ற கோயில்களுக்கு சென்று வந்தேன். பொதுமக்கள் மிகுந்த அன்போடு பழகினார்கள். மகிழ்ச்சியாக உள்ளது.

எது உண்மையோ அதனை மாற்ற முடியாது; திரையிட்டு மறைக்க முடியாது. அதிமுக தரப்பிடமிருந்து இதுவரை எந்தவித சமிஞ்கையும் வராதது தனக்கு வருத்தம் இல்லை. எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தனியாக தான் இருந்தார். நாங்கள் அவருடன் இருந்து அதன் பின்னர் ஆட்சியமைத்தோம்’ என்றார்.

கடவுளுக்குத் தெரிந்த உண்மை: உங்கள் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அவர் உண்மையை சொல்லியிருப்பதாகத் தெரிவித்தார்.

’ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டபோது, பொதுமக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்காக சரி என்று தான் என அன்றைக்கே சொல்லியுள்ளேன்.

சசிகலா பேட்டி

தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மக்கள் கூறியதாக நினைக்கவில்லை. அரசியலில் தன்னைப் பிடிக்காதவர்கள் கூட இப்படி ஆரம்பித்து இருக்கலாம்' எனத் தெரிவித்தார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் விசாரணை ஆணையத்தில் கூறியது பற்றி கேட்டதற்குப் பதில் அளித்த அவர், ’கடவுளுக்குத் தெரிந்த உண்மை; நேற்று மக்களுக்கும் தெரிந்துள்ளது’ என்றார்

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் பாஜக - திமுக இடையே சுவாரஸ்ய விவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.