2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 187 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது.
இந்தச் சோதனை விவரங்களை வருமானவரித்துறை அலுவலர்கள் மதிப்பீடு செய்துவரும் நிலையில், சில விளக்கங்களைக் கேட்டு வருமானவரித்துறை சார்பில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலுள்ள சசிகலாவிற்கு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சசிகலாவுக்கு சொந்தமான வீட்டை 15 நாள்களில் இடிக்கவேண்டும்!
இவ்வேளையில் இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கக் கோரி, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு எதிராக வருமானவரித்துறை அலுவலர்கள் சேகரித்த சாட்சியங்களின் விவரங்களையும் ஆவணங்களையும் ஒப்படைக்காமல் உள்ளதால், தனக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா கூத்தாடிகள் எதுவும் பண்ண முடியாது - சுப்பிரமணியன் சுவாமி
மேலும், வருமானவரித்துறையிடம் வாக்குமூலம் அளித்த தனது உறவினர்களான கிருஷ்ணபிரியா, ஷகீலா, விவேக் ஜெயராமன், சிவக்குமார் உள்ளிட்ட 14 பேரிடமும் தனக்குச் சொந்தமானதாக சொல்லப்படும் நிறுவனங்களின் மேலாளர்கள், ஆடிட்டர்கள் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமெனவும் அதுவரை வருமானவரித்துறை மதிப்பீட்டு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
’சசிகலாவை நம்பி தொண்டர்களோ, தலைவர்களோ இல்லை’ - கே.சி. வீரமணி
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, வருமானவரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாகவும் இந்த மனு செல்லாததாகி விட்டதாகவும் தெரிவித்தார். வருமானவரித்துறையின் இந்த விளக்கத்தை பதிவுசெய்த நீதிபதி சசிகலாவின் மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டார்.