ETV Bharat / city

Sanitary Workers Protest: போராட்டத்தை அறிவித்த தூய்மைப் பணியாளர்கள் - மகப்பேறு மற்றும் குழந்தை நலம்

பணிநிரந்தரம், ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நாளை (நவம்பர் 28) காலை சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Sanitary Workers Protest, ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கம்
Sanitary Workers Protest
author img

By

Published : Nov 27, 2021, 8:51 AM IST

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய (RCH) ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாந்தி கூறியுள்ளதாவது, "தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005ஆம் ஆண்டுமுதல் ஆர்.சி.ஹெச். திட்டத்தின்கீழ், தற்காலிக அடிப்படையில் மூன்றாயிரத்து 140-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

அவர்களுக்கு மாதந்தோறும், மிகக் குறைவாக ஆயிரம் ரூபாய் மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிபவர்களுக்கு இந்தத் தொகுப்பூதியம் ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. அவர்கள் தொடர்ந்து நாள்தோறும் 12 மணிநேரம் பணி செய்யவைக்கப்படுகின்றனர். வார விடுமுறை, அரசு விடுமுறைகூட வழங்கப்படுவதில்லை.

அனைவரும் விளிம்புநிலையினர்

இது கடுமையான உழைப்புச் சுரண்டலாகும். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களில் பெரும்பாலானோர், பட்டியலின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெண்கள் என்பதும், பொருளாதார ரீதியில் வறுமைக் கோட்டிற்கும்கீழ் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்திற்கு வெறும் ரூபாய் 1,000 முதல் 1,500 வரை தொகுப்பூதியத்தைப் பெற்றுக்கொண்டு எவ்வாறு, இவர்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும்? எப்படி கௌரவத்துடன், சுயமரியாதையுடன் வாழ முடியும்? இவர்களின் தொகுப்பூதியம், 'குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்கே' எதிராக உள்ளது.

8 மணிநேரம் வேலை

எனவே, இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும். இவர்களின் ஊதியத்தை மாநில அரசின் நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்திற்கு நிகராக உயர்த்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் நிரந்தரப் பணியாளர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கிட வேண்டும்.

அவர்களுக்கு வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற எந்த விடுப்புகளும் வழங்கப்படுவதில்லை. அவற்றையும் வழங்கிட வேண்டும். 12 மணிநேர வேலை என்பதை ரத்துசெய்து, எட்டு மணிநேரம் மட்டுமே வேலை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பணியிடங்களில் உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதோடு, கௌரவமான முறையில் பணியாற்றும் வகையில் பணியிடச் சூழலை உருவாக்கிட வேண்டும். இலவச சீருடை, இலவச பேருந்து பயண அடையாள அட்டை வழங்கிட வேண்டும். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும்.

கௌரவுமும் சுயமரியாதையும்

அவர்களின் கௌரவமும், சுயமரியாதையும் காக்கப்பட வேண்டும். கரோனா பணிக்கான சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும். ஆர்.சி.ஹெச். திட்டத்தின்கீழ் பணிபுரியும், இந்தத் தூய்மைப் பணியாளர்களின் சேவை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட அவசியமானது. அங்கு பிரசவங்களைப் பார்ப்பதற்கு அத்தியாவசியமானது. பிரசவத்திற்கு வரும் தாய்மார்களுக்கு உற்ற துணையாக இருந்து அனைத்து பணிவிடைகளையும் இவர்கள் செய்கின்றனர்.

எனவே, பல்வேறு மக்கள் நலன்சார்ந்த மருத்துவத் திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திவரும் தமிழ்நாடு அரசு, இந்தத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளையும் உடனடியாக ஏற்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு 20 மதிப்பெண் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.