ETV Bharat / city

மார்ச் 3இல் கூடுகிறது சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு!

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6ஆவது பொதுக்குழு கூட்டம் மார்ச் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

sarathkumar
சரத்குமார்
author img

By

Published : Feb 8, 2021, 6:40 PM IST

Updated : Feb 8, 2021, 7:21 PM IST

இது தொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான சரத்குமார் இன்று (பிப். 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமக கட்சியின் சட்டத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடிப்படையில், விதி எண் 14, பிரிவு 4இன் படி கட்சியின் 6ஆவது பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி திரவியபுரத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பொதுக்குழு நிகழ்வுகளை சிறப்பித்துத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

samathuva makkal katchi general body meeting
சமத்துவ மக்கள் பொதுக்குழு தேதி அறிவிப்பு

பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்தல், மாநில நிர்வாகிகள் மண்டல அமைப்புச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமனம், பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளோடு பிற நிகழ்வுகள் குறித்த நிகழ்ச்சி நிரல் விரைவில் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெற்று விளம்பர ஆட்சி நடத்தும் அதிமுக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

Last Updated : Feb 8, 2021, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.